2
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 459ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் நால்வர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்கள் எனவும் மற்றொருவர் குவைத்தில் இருந்து வந்தவர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.