இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு சீரடையும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன் இந்தியாவுக்கு அந்நியமானவர் அல்ல.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பாரக் ஒபாமாவின் அரசில் துணை ஜனாதிபதியாக இருந்தபோது அவர் இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருந்தார்.
டொனால்ட் டிரம்ப் விட்ட இடத்திலிருந்து இந்திய- அமெரிக்க நட்புறவை ஜோ பைடன் தொடர்ந்து மேலே எடுத்துச் செல்வார். முன்னாள் ஜனாதிபதிகளான கிளின்டன், ஜோர்ஜ் புஷ், ஒபாமா, டிரம்ப் என கடந்த 20 ஆண்டுகளில் நான்கு ஜனாதிபதிகளுடன் இந்தியா கொண்ட உறவு வளர்ச்சியை அடைந்துள்ளது.
நான்கு வெவ்வேறு கொள்கை கொண்ட ஜனாதிபதிகளும், இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.