செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் எழுத்துத் தேர்வு!

கிளிநொச்சி தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் எழுத்துத் தேர்வு!

1 minutes read

கிளிநொச்சி தமிழ்ச் சங்கம் வருடாந்தம் நடாத்துகின்ற திருக்குறல் எழுத்து தேர்வு வருகின்ற மாதம் முதல் வாரத்தில் நடாத்துவதற்கு தமிழ்ச் சங்கம் தீர்மானித்துள்ளது. எனவே அதற்கான வேண்டுகைகளை விரைவாக அனுப்பி வைக்குமாறும் இதுவரை வேண்டுகைகளை அனுப்பாத பாடசாலைகளிடம் கிளிநொச்சி

தமிழ்ச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி தமிழ்ச்சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்தெரிவித்துள்ளதாவது

இளஞ்சிறார்களை கல்வியின் வழியே மாண்புடையவர்களாக ஆக்கும் பருவமே மாணாக்கப் பருவம் ஒரு சமுதாயத்தின்உயர்வும் தாழ்வும், ஏற்றமும் வீழ்ச்சியும் அதன் அதன் இளையதலைமுறையினராகிய மாணவர்களையே சாரும்.

அத்துடன் நல்லன- அல்லன எல்லாம் சேரும். ஆகையால் கற்கும் பருவத்தில் மாணவர்களுக்கு உயர்ந்த கருத்துக்களையெல்லாம் கொடுத்தல் பெற்றோர்கள், ஆசிரியர், பெரியோர்கள்கடமையாகும்.

பள்ளியை விட்டு விலகும் மாணவர் சான்றோனாக ஒழுக்கத்தில்
மேன்மையுடையவனாக இருப்பதற்கு திருக்குறளே ஊன்றுகோல் தூண்டுகோல் ஆக இருக்க வேண்டும்.

இவற்றை எல்லாம் எண்ணியே கடந்த 27 ஆண்டுகளாக திருக்குறள் தேர்வைஆண்டு 02 தொடக்கம் ஆண்டு 13 வரையான கல்வி கற்கும் மாணவர்களுக்கு தேர்வை நடத்தி பரிசில்களையும் வழங்கி வருகின்றது.

இந்த ஆண்டு தேர்வுக்கான வேண்டுகைகள் பல பள்ளிகள் அனுப்பியுள்ளனர். “கோரணா” தொற்றுப் பிணி காரணமாக ஏற்கனவே அறிவுறித்தியதற்கு ஏற்ப பள்ளிகள் இயங்காமையால் நவம்பர் மாதங்களில் நடத்த வேண்டிய இத்தேர்வை நடத்த முடியவில்லை.

தற்போது பள்ளிகள் இயங்குகின்றமையால் தேர்வை அடுத்த மாதம் முதற்கிழமை நடத்த எண்ணியிருப்பதால் வேண்டுகைகளை அனுப்பத் தவறிய பள்ளிகள்உடன் அனுப்பி உதவுமாறும் மாணவர்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஊக்கப் படுத்துமாறும் தமிழ்ச் சங்கம் வேண்டுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.