என்னென்ன தேவை?
வீட் சேமியா – 100 கிராம்,
அரிசி மாவு – 50 கிராம்,
பொட்டுக்கடலை மாவு – 25 கிராம்,
மிளகாய்த்தூள்,
சோம்பு,
நசுக்கிய பூண்டு – தேவைக்கு,
இஞ்சித்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
முட்டைக்கோஸ் – 100 கிராம்,
நறுக்கிய புதினா,
கொத்தமல்லி – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
சேமியாவை வெந்நீர் விட்டு 3 நிமிடங்கள் ஊறவிடவும். இத்துடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் கலந்து சூடான எண்ணெயில் பக்கோடாவாக உதிர்க்கவும். பொன்னிறமாக பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.