புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சூரிய கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?

சூரிய கதிர்வீச்சில் இருந்து சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்?

1 minutes read

காலை வேளையில் வெளிப்படும் சூரிய கதிர்வீச்சுக்கள்தான் உடலுக்கு நல்லது. சூரிய கதிர்வீச்சில் சருமத்திற்கு பாதிப்பு நேராமலும், பளபளப்பு தன்மை குறையாமலும் இருப்பதற்கு சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வாமை பிரச்சினை கொண்டவர்கள் தோல் மருத்துவரை அணுகி சரும பொருட்களை பயன்படுத்துவது நல்லது. அதுபோல் புதிய பொருட்களை பயன்படுத்த முயற்சிப்பவர்களும் உங்கள் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்புடைய பொருட்களை தேர்வு செய்து உபயோகிப்பதுதான் சிறந்தது.

ஒப்பனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒப்பனை அதிகமாக இருந்தால் அவை சரும துளைகளை அடைத்துவிடும். அதிக வெப்பமும், ஈரப்பதமும் சருமத்தின் சுவாச திறனை பாதிக்கும்.

சரும செல்களில் இருந்து வெளியாகும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியான குளுட்டாதையோன் போன்றவை சருமத்தின் நிறமிக்கு உதவும்.

“குளுட்டாதையோன் நம் உடலில் மெலனின் செயல்பாட்டை சீர்படுத்தும். அதனால் சருமம் கருமை நிறத்திற்கு மாறுவது தடுக்கப்படும். மேலும் குளுட்டாதையோன் சருமத்தில் கருமையான புள்ளிகள் தோன்றாமலும் தடுக்கும். சருமத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்களால் உருவாகும் நச்சுகளை அகற்றவும் உதவும்” என்கிறார் தோல் மருத்துவர் சுஷாந்த் ரோரேன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More