அரபு நாடுகளில் விதார்த் ‘ஆள் படத்துக்கு தடைஅரபு நாடுகளில் விதார்த் ‘ஆள் படத்துக்கு தடை

விதார்த், கார்த்திகா ஷெட்டி ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஆள்’. அரவிந்த கிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் விடியல் ராஜூ வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கிறது.

ஆள் படத்தை மலேசியா மற்றும் அரபு நாடுகளில் வெளியிட தயாரிப்பாளர் விடியல் ராஜூ திட்டமிட்டார். படத்தை பார்த்த அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் படத்தில் இருப்பதாக கூறி அனுமதி மறுத்து ரிலீஸ் செய்ய தடை விதித்து விட்டனர். இது குறித்து விடியல் ராஜூ கூறும்போது,

இந்தியில் வெற்றி பெற்ற அமீர் என்ற படத்தை ‘ஆள்’ என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளேன். இது தரமான படம். முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்கள் எதுவும் இப்படத்தில் இல்லை. மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இந்த படத்துக்கு தடை விதித்திருப்பது துரதிர்ஷ்டமானது. தடையை நீக்க போராடுவேன் என்றார்.

ஆசிரியர்