September 27, 2023 12:34 pm

தொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக இருக்கமாட்டேன் சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல்- பிரியாமணிதொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக இருக்கமாட்டேன் சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல்- பிரியாமணி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகை பிரியாமணிக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். படங்கள் குறைந்துள்ளதால் திருமணம் செய்து கொண்டு ‘செட்டில்’ ஆக முடிவு செய்துள்ளார்.

தொழில் அதிபருக்கு பிரியாமணியை கட்டி வைக்க பெற்றோர் விரும்புகின்றனர். இதற்காக கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களில் வசதியாக இருக்கும் தொழில் அதிபரை மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே திருமணமான பிரபல தொழில் அதிபர்கள் பிரியாமணியை இரண்டாவது மனைவியாக வைத்துக் கொள்ள விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகைகள் பலர் ஏற்கனவே திருமணமான வரைத்தான் மணந்துள்ளார்கள். பிரியாமணியும் அப்படிப்பட்ட வரைத்தான் மணப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. இதனை பிரியாமணி மறுத்துள்ளார்.

அவர் கூறும்போது, தொழில் அதிபருக்கு 2–வது மனைவியாக இருக்கமாட்டேன். அதைவிட சினிமா ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவியாக இருப்பது மேல். தலைவிதி எப்படி இருக்கிறதோ அதன்படி நடக்கும் என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்