முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் “அவம்” படத்திற்காக பாடல் பாடிய கமல்ஹாசன்முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் “அவம்” படத்திற்காக பாடல் பாடிய கமல்ஹாசன்

இச்சி இடுப்பழகி, ஆழ்வார் பேட்டை ஆண்டவா, நீல வானம் என  தனது படங்களில் பல ஹிட் பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். தற்போது முதன்முறையாக முற்றிலும் புதுமுகங்களை வைத்து விஜே புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் “அவம்” படத்திற்கு கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார்.

மதன் கார்க்கியின் வரிகளில் அமைந்துள்ள அந்த பாடல், ஒரு இளைஞனின் கவலையையும்,  தனிமையையும் உணர்ச்சி பூர்வாகமாக வெளிப்படுத்தும்  வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவம் படத்தில்  புதுமுக் கௌரவ் ஹீரோவாகவும், புதுமுகம் காவ்யா ஷேட்டி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரியம் ஹீரோ, அங்கு ஹிரோயினை கண்ட பின் ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களே இந்த படத்தின் கதையாம்.

படத்தில் கமல் பாடியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள படக்குழு, கமல் பாடியிருக்கும் இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களிடைய பெரும் ஹிட்டாகும என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்