ஐந்தே நாட்களில் 200 கோடி: ‘பேங் பேங்’ படம் அசத்தல் வசூல்!ஐந்தே நாட்களில் 200 கோடி: ‘பேங் பேங்’ படம் அசத்தல் வசூல்!

ரித்திக் ரோஷன், கத்ரீனா ஃகைப் நடிப்பில் கடந்த 2ம் தேதி திரைக்கு வந்த படம் பேங் பேங். இந்தப் படம் உலகம் முழுவதும் தற்போது வசூலில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 156. 41 கோடியும் வெளிநாடுகளில் 45.10 கோடி என மொத்தம் இதுவரை 201.51 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ‘தூம்-3’ படத்தை தொடர்ந்து இரண்டாவது பெரிய ஓப்பனிங் இந்தப்படத்திற்கு கிடைத்துள்ளது.

தவிர பாகிஸ்தானிலும் புதிய வசூல் ரெக்கார்டை படைத்துள்ளது. இப்படம் 100 கோடி கிளப்பில் இடம் பிடித்துள்ளதால் படக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பேங் பேங் திரைப்படம் உலகம் முழுவதும் 5100 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் இந்தியாவில் 4300 திரையரங்குகள், வெளிநாட்டில் 852 திரையரங்குகள் அடங்கும்.

சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள பேங் பேங் திரைப்படத்திற்கு விஷால் சேகர் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்