70 அடி உயரத்தில் பறந்து பறந்து நடித்த பிரயஹா!70 அடி உயரத்தில் பறந்து பறந்து நடித்த பிரயஹா!

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு. இயக்குனர் பாலா தயாரிக்கிறார். நாகா என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். லண்டன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து முடித்து விட்டு நடிகராகியிருக்கிறார். கொச்சியை சேர்ந்த நடன கலைஞர் மற்றும் மாடல் அழகியான பிரயஹா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

பிசாசு பேய் படம் என்றாலும் இந்த படம் அழகான பேய் படம். யாரையும் பயமுறுத்தாது. இப்படி ஒரு பேய் காதலி, பேய் நண்பன் தனக்கு வேண்டும் என்கிற அளவிற்கு அழகான பேய் படமாம். இதில் பேயாக நடிக்கிறார் பிரயஹா, வெள்ளை உடை, விரித்த தலை, கொலுசு சத்தம் இப்படி எதுவும் இல்லாமல் அழகான பேயாக நடிக்கிறார்.

பெரும்பாலான காட்சிகளில் 70 அடி உயரத்திற்கு ரோப் கட்டி தூக்கி நிறுத்தியபடியே நடிக்க வைத்திருக்கிறார்கள். அதாவது கதைப்படி வானத்தில் மிதந்தபடியே இருப்பார் பிரயஹா. இந்த காட்சிகள் படப்பிடிப்பின் போது பலமுறை தவறி விழுந்தும், சுவரில் மோதியும் காயம் பட்டிருக்கிறார். இதைப் பார்த்து அவரது அம்மா அழுதியிருக்கிறார்.

ஆனால் நடிப்பின் மீது அதீத ஆர்வம் கொண்ட பிரயஹா அம்மாவை சமாதானப்படுத்தி, காயங்களையும், வலியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

ஆசிரியர்