Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மகன் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’மகன் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’

மகன் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’மகன் இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கும் ‘சிகப்பு ரோஜாக்கள் 2’

1 minutes read

பாரதிராஜாவின் இயக்கத்தில், கமல் ஹாசன் – ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பாரதிராஜா தயாராகிவிட்டார். படத்தை பாரதிராஜா தயாரிக்க அவருடைய மகன் மனோஜ் இயக்குகிறார். படத்திற்கு ’சிகப்பு ரோஜாக்கள் 2’ என்கிற தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

இதில் கமல் கேரக்டரில் விசாகன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜாவும் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. இதுதவிர மேலும் 2 புதிய படங்களில் நடிக்கவிருக்கிறார் பாராதிராஜா.

சலீம் படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் இயக்கத்தில், “ஒம்” என்ற படத்திலும், VLS ராக் சினிமா, வி. சந்திரன் தயாரிப்பில் கிஷோர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.அதோடு பாடலாசிரியிர் சிநேகன் நடிப்பில், ஒரு புதிய படத்தை இயக்கவும் இருக்கிறார்.

சின்னத்திரை நெடுந்தொடர்களில் பிஸியாக இருந்த பாராதிராஜா, இனி வெள்ளித்திரையில் அடுத்தடுத்து கவனம் செலுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More