March 29, 2023 2:03 am

ரஜினி பிறந்த நாள் | ரசிகர்கள் ரத்த தானம், கண் தானம் ரஜினி பிறந்த நாள் | ரசிகர்கள் ரத்த தானம், கண் தானம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ரஜினி பிறந்த நாளை ரசிகர்கள் வருகிற 7–ந்தேதியில் இருந்து ஒரு வாரம் கொண்டாடுகின்றனர்.

கே.கே. நகர் பகுதி ரஜினி மன்றம் சார்பில் ரஜினி பிறந்த நாளையொட்டி நாளை மறுநாள் காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஓம் சேர்மா திருமண மண்டபத்தில் 200 பேர் ரத்ததானம் செய்கிறார்கள். 250 பேர் கண் தானம் செய்கின்றனர். 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

சென்னை மாவட்ட நிர்வாகிகள் என்.ராமதாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி நிகழ்ச்சிக்கு முன்னிலை வகிக்கின்றனர். நடிகர் டெல்லி கணேஷ் கண் சிகிச்சை முகாமை துவக்கி வைக்கிறார். கே.கே. நகர் பகுதி நிர்வாகிகள் பி.சாதிக்பாட்ஷா, ஆர்.லட் சுமணன், எம்.கே.எஸ். முருகன், உதயம்கனி, வ.ராஜேந்திரன், ரஜினி மலர், எஸ்.சிவா, கே.முத்துலிங்கம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு செனாய் நகரில் ரஜினி டில்லி தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு ஏழைகளுக்கு இலவச தையல் எந்திரம், சேலை, பாட புத்தகம், இனிப்புகள் வழங்கப்படுகின்றன. பாரதீய ஜனதா வர்த்தக அணி துணை தலைவர் வி.எஸ்.ஜெ.சீனிவாசன் இதில் பங்கேற்று ஏழைகளுக்கு புடவைகள் வழங்குகிறார்.

நடிகர்கள் மூணார் ரமேஷ், யோகிபாபு, சாய்தினா மற்றும் எம்.ரஜினி ஆனந்தன், ரஜினி சுகுமார் பங்கேற்கின்றனர்.

அம்பத்தூர் ஐ.அப்துல் தலைமையில் அம்பத்தூரில் வருகிற 12–ந்தேதி குழந்தைகள் காப்பகத்தில் உணவு வழங்கப்படுகிறது. நிர்வாகிகள் ரஜினி மூர்த்தி, மகேஷ், ரமேஷ், ஜெயராஜ், வேலவன் பங்கேற்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் பொன்னேரி சேகர் தலைமையில் மீஞ்சூர் பொன்னேரி ஒன்றியங்கள் சார்பில் 12–ந்தேதி 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில்களில் சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

நியூஸ் பேப்பர் சீனு தலைமையில் தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்