March 29, 2023 2:18 am

அரசியல் சாக்கடை வேண்டாம் | ரஜினிக்கு ரசிகர்கள் வேண்டுகோள்அரசியல் சாக்கடை வேண்டாம் | ரஜினிக்கு ரசிகர்கள் வேண்டுகோள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 65வது பிறந்த நாள் இன்று ரசிகர்கள் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.

லிங்கா படத்துக்கான டிக்கெட்டுகள் அமோகமாக விற்பனையாகி வருகிறது. ரஜினிகாந்தின் லிங்கா படத்திற்கான மெகா கட்டவுட்கள் திரையரங்க வாசலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிறந்த நாளுக்கான கொண்டாட்டங்களும் பல்வேறு மாவட்டங்களில் ரசிகர் மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையில் மதுரையில் ரஜினி ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள ஒரு பேனரில் வேண்டாம் வேண்டாம் அரசியல் சாக்கடை வேண்டாம் என ரசிகர்கள் ரஜினிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் உண்மையான ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு ரஜினி அரசியலை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்