கிரிக்கெட்டில் அளப்பரிய சாதனைகளைச் செய்த சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்து, திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அவரே நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த இயக்குநர் ஜேம்ஸ் எஸ்ர்கின் படத்தை இயக்க உள்ளார்.
சச்சினின் கிரிக்கெட் வாழ்வு குறித்து நன்றாகத் தெரியும் என்பதால், இந்தப் படம் பெரும்பாலும் அவரது தனிப்பட்ட வாழ்வை மையப்படுத்தியே இருக்கும் என்று அந்த தயாரிப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
90 நிமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் நீளும் இந்தப் படம், ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.