March 31, 2023 3:48 am

“எலி” | வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார் “எலி” | வடிவேலு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடிவேலு மீண்டும்  கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு எலி என்று பெயரிடப்பட்டுள்ளது.

அரசியல் பிரவேசம் காரணமாக திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த வடிவேலு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தெனாலிராமன் என்ற படத்தில் நடித்தார். யுவராஜ் இயக்கிய அந்த படம் தோல்வியை தழுவியது. இதனையடுத்து வடிவேலு மீண்டும் காமெடி வேடங்களுக்கே திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. கொம்பன் படத்துக்கு பின் கார்த்தி நடிக்கும் காஸ்மோரா படத்தில் வடிவேலு ஒப்பந்தம் ஆனதாக செய்திகள் வெளியாகின. ஆனால் மீண்டும் கதாநாயகனாகவே களம் இறங்கியுள்ளார் வடிவேலு.

தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு எலி என பெயரிப்பட்டுள்ளது. வித்யாசாகர் இசையமைக்கும் இப் படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியானது. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம கொடுத்து எலி தயாராக உள்ளதாம்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்