நஸ்ரியா தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நஸ்ரியா சினிமாவில் நடிக்கவில்லை.
பஹத் பாசில் மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகராக இருக்கிறார். இவரும் ஆண்ட்ரியாவும் ‘அன்னயும் ரசூலும்’ என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் கேரளாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் ரசூல் என்ற கேரக்டரில் நடித்த பஹத் பாசிலை உருகி உருகி காதலிக்கும் காதலியாக ஆண்ட்ரியா நடித்து இருந்தார்.
சமீபத்தில் ஆண்ட்ரியாவிடம் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்ட போது ரசூல் கேரக்டரை போல் ஒருவர் கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்து கொள்வேன் என்று பதில் அளித்தார்.
பஹத் பாசிலை போல் கணவர் வேண்டும் என்பதை தான் மறைமுகமாக இப்படி அவர் சொன்னதாக மலையாள பட உலகினர் கிசு கிசுக்கின்றனர். இதன் மூலம் பஹத் பாசிலுடன் ஆண்ட்ரியாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. இது நஸ்ரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.