சமீபத்தில் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை டிடி என்கிற திவ்யதர்ஷினியும் நீயா நானா கோபிநாத்தும் தொகுத்து வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அப்போது இந்த நிகழ்ச்சியில் டிடி மிக அதிகமாகவும் சுவாரசியம் இல்லாமலும் பேசியதாக சமூகவலைத்தளங்களில் பலரும் விமரிசனம் செய்தார்கள்.
இதைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் டிடி. அவர் கூறியதாவது:
அன்பா சொன்னவங்களுக்கும் மோசமா சொன்னவங்களுக்கும் நன்றி. உங்களுடைய கருத்துகளை எடுத்துக்கொள்கிறேன். அடுத்தமுறை நிச்சயம் இன்னும் சிறப்பாக செய்வேன். என் குடும்பத்தினருக்கும் தொலைக்காட்சிக்கும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.