பாலிவுட் தாதா அமிதாப் பச்சனைக் கொண்டாடும் ரசிகர்கள் உலகம் முழுவதும் உண்டு. ஆனால் அவர்கள் யாருக்கும் கிடைக்காத வரவேற்பு அவரது தீவிர ரசிகையான ஒரு குட்டிப்பெண்ணுக்கு கிடைத்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த 4 வயது சிறுமி ரேவா, ஷோலே தொடங்கி அமிதாப்பின் பல வெற்றிப்படங்களைப் பார்த்து அவரது ரசிகையாகவே மாறிவிட்டாள். இந்த குட்டி ரசிகையின் வீடியோ ஒன்றை அமிதாப் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்ற 5 மணி நேரத்திற்குள் 18 ஆயிரம் பேர் அதை லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கனோர் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் அதை ஷேர் செய்தனர்.
அப்படி அந்த வீடியோவில் என்னதான் ஸ்பெஷல்?.. ரேவாவின் மழலைப் பேச்சுதான் ஸ்பெஷல், அவரது அப்பா உனக்கு அமிதாப்பை ரொம்ப பிடிக்குமா? என்று கேட்க ”ஆமா..அவருடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும். அதுவும் அலாவுதீன் படத்துல ஜீனி பூதமா வருவாரே.. அவர நா நேர்ல பாக்கணும்.” என்று சொல்ல அவரது அப்பா அவர் வருவார்னு நினைக்கிறாயா? என்று கேட்க ”வருவார்னு நினைக்கிறேன்” என்று குழைந்து கொண்டே சொல்கிறாள் ரேவா.
உடனே அப்பாவிடம் ”அவர நம்ம வீட்டுக்கு கூட்டி வாப்பா” என்று சொல்ல.. அவரும் வீடியோவில் ”அமிதாப்ஜி நீங்கள் லண்டன் வந்தால் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்” என்று கூற அவரை இடைமறிக்கும் ரேவா ”வந்து என் கூட கொஞ்ச நேரம் தூங்கணும், கொஞ்ச நேரம்..ப்ளீஸ்…” என்று கெஞ்சும் ரேவாவுக்கு நோ சொல்ல யாருக்குதான் மனம் வரும்.