சுவீடன் நாட்டில் நடந்த சர்வதேச சைக்கிள் ஓட்டும் போட்டியில் நடிகர் ஆர்யா 300 கி.மீ., தூரத்தை 15 மணி நேரத்தில் கடந்து பதக்கம் வென்றார்.நடிகர் ஆர்யா கல்லூரியில் படிக்கும் போது கால்பந்து மற்றும் சைக்கிள் ஓட்டும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்தார். நடிகரான பிறகு உடற்பயிற்சியின் போது மட்டும் சைக்கிள் ஓட்டி வந்தார்.சுவீடன் நாட்டில் மோட்டாலா நகரில் ஆண்டுதோறும் நடக்கும் ‘வார்டர்ன் ருண்டன்’ சைக்கிள் பந்தயம் மிகவும் பிரபலமானது. இப்போட்டி 50 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில் பங்கேற்க ஆர்யா ஆர்வமாக இருந்தார்.இந்தியாவின் ‘டி.ஐ.’ சைக்கிள் நிறுவனம் ஆர்யாவுக்கு ஆதரவு தந்தது. எனவே கடந்த எட்டு மாதமாக ஆர்யா சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 12ம் தேதி வார்டர்ன் ருண்டன் சைக்கிள் போட்டியில் பங்கேற்றார். பந்தய தூரமான 300 கி.மீட்டரை 15 மணி நேரத்தில் கடந்து பதக்கம் வென்றார்.இந்த சைக்கிள் போட்டி சமதள சாலையில் மட்டுமல்லாமல் அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், எதிர்காற்று போன்றவற்றை கடந்து செல்லும் வகையில் இருந்தது.நடிகர் ஆர்யா கூறுகையில் ”ஆரம்பம் படப்பிடிப்பு நடந்த போது புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஆறு மணி நேரத்தில் சைக்கிளில் வந்தேன். படப்பிடிப்பு பணி இடைவிடாமல் இருந்தபோதும் கிடைக்கும் நேரத்தில் சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன்” என்றார்.- நமது நிருபர் –
0