1980 மற்றும் 90–களில் மீனா முன்னணி கதாநாயகியாக இருந்தார். 2009–ல் இவருக்கு திருமணம் நடந்தது. தற்போது மீனாவுக்கு ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயரிட்டுள்ளனர்.
தற்போது மகளை சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மீனா அறிமுகபடுத்தப்போகிறார். விஜய் ‘புலி’ படத்தை முடித்து விட்டு தனது 56–வது படத்துக்கு தயாராகிறார். அட்லி இப்படத்தை இயக்குகிறார். இதில் நாயகிகளாக சமந்தா, எமிஜாக்சன் நடிக்கின்றனர்.
இதில் விஜய் மகளாக நடிக்க குழந்தை நட்சத்திரம் தேவைப்பட்டது. மீனாவின் மகளை அக்கேரக்டரில் நடித்து தரும்படி கேட்டுள்ளார்ராம். மீனாவும் சம்மதித்து உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.