பிரபல தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி, விஜய் டிவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று சிலநாள்களுக்கு முன்பு செய்திகள் உலவின. கடந்த ஞாயிறு அன்று எங்க வீட்டுச் செல்லம் டிடி என்கிற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது விஜய் டிவி!
‘காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு பிரேக் தேவைப்படுவதால் சில வாரங்கள் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை. மற்றபடி நான் விஜய் டிவியை விட்டுப் போகவில்லை. இந்த டிவியின் செல்லம் நான்தான்’ என்று அந்த நிகழ்ச்சியில் பேட்டியளித்தார் டிடி. இதன்மூலம் தன்னைப் பற்றிய வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விஜய் டிவியின் தலைமை நிர்வாகி, கே. ஸ்ரீராம், இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.
‘நம்ம வீட்டுச் செல்லம் நிகழ்ச்சி, டிடி பற்றிய வேடிக்கையான ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முடிவு கட்டியுள்ளது என நம்புகிறேன். இந்தத் துறையில் டிடி மிகச்சிறப்பானவர்’ என்று ட்வீட் செய்தார். இதற்கு டிடியும் நன்றி தெரிவித்து பதிலளித்தார்.
எங்க வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயன் போல எங்க வீட்டுச் செல்லம் டிடி என்று ஒருவர் ட்வீட் செய்ததை டிடி ரீட்வீட் செய்தார்.
நம்ம வீட்டுச் செல்லம் நிகழ்ச்சி தொடர்பாக டிடி ட்விட்டரில் தெரிவித்ததாவது:
‘இந்த நிகழ்ச்சி, உங்களுக்குத் தேவையான எல்லாப் பதில்களையும் கொடுத்திருக்கும். இந்த நிகழ்ச்சி நடத்த உதவிய அனைவருக்கும் நன்றிகள். நான்தான் எப்பவும் செல்லம்!’