தலைப்பில் ரெண்டு காதல் என்று வந்துள்ளதால், இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. எனவே, விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றிநடை போடுவதால், இப்படத்தில் அவருக்கு முன்னணி நாயகிகளை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி ஏற்கெனவே விஜய்சேதுபதியுடன் நடித்த நயன்தாராவை இப்படத்தில் ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யலாம் என முடிவு செய்தனர். இரண்டாவது ஹீரோயினாக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அவர் முதலில் இதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. தற்போது, திரிஷா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரே படத்தில் நயன்தாரா, திரிஷா என முன்னணி நாயகிகளுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதிக்கு கண்டிப்பாக அதிர்ஷ்ட மழை என்றுதான் கூறவேண்டும்.