செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சிறப்பு நடனப் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிய ஆசை | பிரபுதேவாசிறப்பு நடனப் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிய ஆசை | பிரபுதேவா

சிறப்பு நடனப் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிய ஆசை | பிரபுதேவாசிறப்பு நடனப் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிய ஆசை | பிரபுதேவா

1 minutes read

நடனப் பயிற்சிக் கல்லூரியில் சிறப்பு நடனப் பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிய ஆசை என்று நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா கூறினார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.12 லட்சம் செலவில் கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் சிலை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மூன்றரை டன் எடையில், 10 அடி உயரத்தில், ஐந்தரை அடி அகலத்தில் 45 நாள்களில் மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் ரமேஷ் செதுக்கிய சிலையை பிரபுதேவா திறந்து வைத்தார்.

விழாவையடுத்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இசை, நடனத் திறமையால் உலக அளவில் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, ரசிகர்களின் நினைவில் நீங்காமல் வாழ்ந்து வரும் மைக்கேல் ஜாக்சன் சிலையைத் திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வரும் கல்வியாண்டில் நடனக் கல்லூரி தொடங்கவிருப்பதாக பல்கலைக்கழகத் தலைவர் ஐசரி கே.கணேஷ் கூறினார். அதில் சிறப்பு நடனப் பயிற்சி ஆசிரியராக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.