செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தைஇளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தை

இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தைஇளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு பெண் குழந்தை

1 minutes read

இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா. சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

அதை தொடர்ந்து 100–க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்தார். பிரியாணி இவரது 100–வது படமாகும்.

இசையில் வெளியான பாடல்களில் பெரும்பாலானவை ஹிட் பாடல்களாக அமைத்தன. தற்போது தரமணி, யாக்கை, சென்னை – 28, படத்தின் 2–ம் பாகம், பேரன்பு, கான் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா 2005–ல் சுஜன்யா என்ற பெண்ணை மணந்தார். 2007–ல் சுஜன்யா விவகாரத்து பெற்றார். 2011–ல் ஷில்பா என்ற பெண்ணை மணந்தார். அவரும் பிரிந்து விட்டார்.

2015 ஜனவரி 1–ந் தேதி ஜபருன்னிசா என்ற பெண்ணை யுவன்சங்கர் ராஜா மணந்தார். இதற்காக மதமும் மாறினார். இவர்களுடைய இல்லற வாழ்க்கை இனிதாக போகிறது. யுவன்சங்கர் ராஜா – ஜபருன்னிசா தம்பதிக்கு நேற்று தனியார் ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

நேற்றைய தினம் யுவன் சங்கர் ராஜாவின் தாயார் மறைந்த ஜீவாவின் பிறந்த நாள். அதே நாளில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பது தன்னுடைய அம்மாவே வந்து பிறந்து இருப்பதாக யுவன்சங்கர் ராஜா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.