செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை அனுஷ்கா | “கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டம்” நடிகை அனுஷ்கா | “கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டம்”

நடிகை அனுஷ்கா | “கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டம்” நடிகை அனுஷ்கா | “கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டம்”

1 minutes read

‘‘கொளுத்தும் வெயிலில் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டமாக இருக்கிறது’’ என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:–

‘‘சினிமாவில் 11 ஆண்டுகளாக நடித்துக் கொண்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தெலுங்கில் சூப்பர் என்ற படத்தில் தான் அறிமுகமானேன். ஆனால் அருந்ததி படம் எனக்கு திருப்பு முனையாக அமைந்தது. அந்த படத்தில் நடிக்காமல் இருந்தால் காதல் காட்சிகளிலும் மரத்தை சுற்றி டூயட் பாடும் காட்சிகளிலும்தான் நடித்துக் கொண்டு இருப்பேன்.

எனக்குள் இருக்கும் நடிப்பு திறமையை அருந்ததி வெளிக் கொண்டு வந்தது. வெளியில் போகும்போதெல்லாம் ஆட்டோ டிரைவர் முதல் பெண்கள் வரை எல்லோரும் அதில் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லியே என்னை அழைத்தனர். அதன்பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

ருத்ரமாதேவி, பாகுபலி, இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள் அப்படித்தான் வந்தன. பாகுபலி படத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் ராணி வேடத்தில் வந்தேன். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் இளவரசி வேடத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பை நடத்துகிறார்கள்.

கிரீடம், அதிக எடையில் நகைகள், மன்னர் காலத்து உடைகள் அணிந்து மேக்கப் போட்டுக்கொண்டு இந்த கொளுத்தும் வெயிலில் நடிப்பது கஷ்டமாக இருக்கிறது. குதிரை சவாரி செய்வது, வாள் சண்டை போடுவது என்றும் நடிக்க வேண்டி உள்ளது. ஆனாலும் இந்த படம் திரைக்கு வரும்போது ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பை நினைத்து கஷ்டத்தை பொறுத்துக் கொள்கிறேன்.

கவர்ச்சியாக சாதாரண பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதை சிங்கம்–3 படம் பூர்த்தி செய்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடக்கிறது. அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள புதிய படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறேன்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.