செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் கார்த்தி-தலைப்பு குருதி பூக்கள்இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் கார்த்தி-தலைப்பு குருதி பூக்கள்

இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் கார்த்தி-தலைப்பு குருதி பூக்கள்இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் கார்த்தி-தலைப்பு குருதி பூக்கள்

0 minutes read

இயக்குனர் மணிரத்னம் தனது அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்கப் போகிறார். இப்படத்திற்கான நடிகர், நடிகையர்கள் தேர்வு சமீபகாலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது, இப்படத்திற்கு தலைப்பை உறுதி செய்துள்ளனர். காதல் மற்றும் கேங்ஸ்டர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘குருதி பூக்கள்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை மணிரத்னம் இயக்குவதோடு, அவரே தயாரிக்கவும் செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வைரமுத்து, கார்க்கி இருவரும் இணைந்து பாடல்களை எழுதுகின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவிருக்கிறது. ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஓரளவுக்கு அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்று சொல்லலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.