செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை-சமந்தாகொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை-சமந்தா

கொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை-சமந்தாகொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை-சமந்தா

0 minutes read

தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகி சமந்தா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தெறி, 24 படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்போது தமிழில் வடசென்னை படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கில் “ஜன்தா கேரேஜ்” படத்தில் நடித்து வருகிறார். இவை தவிர புதிய படங்கள் எதையும் சமந்தா ஏற்கவில்லை. நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்க போட்டுள்ளார்.

சமந்தா இதுபற்றி டுவிட்டரில், “என்னுடைய கோடை கால படங்கள் வெளியாகின்றன. இனி நிம்மதியாக தூங்குவேன். கடந்த 8 மாதங்கள் ஓய்வில்லாமல் உழைத்தேன். சோர்வான அந்த நாட்கள் முடிவடைந்து விட்டன. நான் சரியான மகளாகவும், தோழியாகவும் இந்த நேரத்தில் இல்லை.

இனி சில விஷயங்களை மெதுவாக முடிவெடுக்கப் போகிறேன். கொஞ்ச நாளைக்கு புதுப்படங்களில் நடிக்க சம்மதிக்க போவதில்லை. எல்லாவற்றுக்கும் பக்கபலமாக இருக்கும் என் குடும்பத்தாருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.