செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டிநயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டி

நயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டிநயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டி

1 minutes read

நயன்தாராவும், அனுஷ்காவும் அதிக படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்கள். 2 பேருக்கும் படத்துக்கு படம் சம்பளமும் கூடி வருகிறது. இருவருக்கும் கடும் போட்டி நிலவுவதாக பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நயன்தாராவும், அனுஷ்காவும் சம காலத்தில் சினிமாவுக்கு வந்த மூத்த நடிகைகள். இளம் கதாநாயகிகள் வருகை அவர்களின் மார்க்கெட்டை துளியும் சரிக்கவில்லை. பெரிய கதாநாயகர்களின் ஜோடியாகவும் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளாகவும் வலம் வருகிறார்கள். அனுஷ்காவுக்கு 34 வயது ஆகிறது. நயன்தாராவுக்கு 31 வயது.

இத்தனை வயதுக்கு பிறகும் அவர்கள் சினிமாவில் கதாநாயகிகளாக நிலைத்து நிற்பது ஏற்கனவே வயது முதிர்வால் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்ட கதாநாயகிகள் சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா 2005-ல் மலையாளத்தில் இருந்தும், அனுஷ்கா அதே ஆண்டில் தெலுங்கில் இருந்தும் தமிழ் பட உலகுக்கு வந்தனர்.

முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக நடித்து ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் ஜோடி சேரும் அளவுக்கு உயர்ந்தார்கள். நயன்தாரா 60 படங்களையும், அனுஷ்கா 50 படங்களையும் நெருங்குகிறார்கள். காதல் கதையம்சம் உள்ள படங்களில் இருந்து இருவருமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு மாறி விட்டார்கள்.

ராமாயண சீதா வேடத்தில் வந்த ஸ்ரீ ராமராஜ்ஜியம், பேயாக நடித்த மாயா, வெளிநாட்டில் இருந்து வந்து தீவிரவாத கணவனை தேடிப்பிடித்து கொலை செய்யும் பெண்ணாக நடித்த அனாமிகா, காது கேட்காத பெண்ணாக வந்த நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் நயன்தாராவின் நடிப்புத் திறமையை பறைசாற்றின. அனுஷ்காவும் ராணி வேடத்தில் வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சி எடுத்து நடித்த ருத்ரமாதேவி, பாகுபலி மற்றும் குண்டான பெண்ணாக வந்த இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்களில் பேசப்பட்டார்.

தற்போது இருவருமே கை நிறைய படங்கள் வைத்துள்ளனர். சிம்புவுடன் இது நம்ம ஆளு, ஜீவாவுடன் திருநாள், கார்த்தியுடன் காஷ்மோரா, விக்ரமுடன் இருமுகன் ஆகிய படங்களில் நயன்தாரா நடிக்கிறார். இது நம்ம ஆளு விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் இரண்டு பெயரிடப்படாத தமிழ் படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

அனுஷ்கா பாகுபலி இரண்டாம் பாகம், பாக்மதி, சிங்கம்-3 போன்ற படங்களில் நடிக்கிறார். நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.2.50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவி ஜோடியாக அவருடைய 150-வது படத்தில் நடிக்க ரூ.3 கோடி கேட்டாராம். ஆனால் அந்த தொகையை கொடுக்க சிரஞ்சீவி சம்மதிக்காமல், அவருக்கு பதிலாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.

அனுஷ்காவும் ரூ.1.50 கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை சம்பளம் கேட்கிறாராம். தற்போதைய நிலவரப்படி நயன்தாராவே தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 இடத்தில் இருக்கிறார். அந்த இடத்தை தட்டிப்பறிக்கும் முயற்சியில் அனுஷ்காவும் முன்னேறி வருகிறார். இருவருக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.