இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது. ஆனால், இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் ருமேனியா நாட்டைச் சேர்ந்த டி.வி. நடிகை லூலியா என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்து உள்ளது.
சமீபத்தில் சல்மான்கானின் தாய் மற்றும் சகோதரியுடன் லூலியா மும்பை விமான நிலையத்தில் தோன்றினார். இதையடுத்து நடிகை பிரீத்தி ஜிந்தா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான்- லூலியா காதல் ஜோடியினர் கலந்து கொண்டனர். இது அவர்களுக்கு இடையேயான காதல் நெருக்கத்தை உணர்த்தியது. மேலும் இந்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவியது.
இதற்கிடையே தனது திருமணம் எப்போது என்பது பற்றி ஊடகங்களுக்கு தெரிவிக்க மாட்டேன், அப்படி திருமணம் செய்து கொள்ளும்போது, அதை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வேன் என்று சல்மான்கான் தெரிவித்து இருந்தார்.