செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா இயக்குன நடிகர் பாலுஆனந்த் மரணம் | மாரடைப்பால் உயிர்பிரிந்ததுஇயக்குன நடிகர் பாலுஆனந்த் மரணம் | மாரடைப்பால் உயிர்பிரிந்தது

இயக்குன நடிகர் பாலுஆனந்த் மரணம் | மாரடைப்பால் உயிர்பிரிந்ததுஇயக்குன நடிகர் பாலுஆனந்த் மரணம் | மாரடைப்பால் உயிர்பிரிந்தது

1 minutes read

கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் இயக்குனரும் நடிகருமான பாலு ஆனந்த் (வயது 62). இவரது மனைவி உமாமகேஷ்வரி. இவர்களுக்கு ஸ்ரீசரவணன் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர் கடந்த சில வருடங்களாக பாலு ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில்  நேற்று இரவு 11 மணியளவில் திடீரென சேரில் அமர்ந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பாலு ஆனந்த் இறந்து விட்டார்.

மரணம் அடைந்த பாலு ஆனந்த் இயக்குனர் ஆர்.சுந்தரராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அதன் பின்னர் நானே ராஜா, நானே மந்திரி, ரசிகன் ஒரு ரசிகை, அண்ணாநகர் முதல் தெரு, உனக்காக பிறந்தேன். சிந்து பாத் உள்பட 12  படங்களை இயக்கினார். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மரணம் அடைந்த பாலு ஆனந்த் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று மாலை வீரகேரளத்தில் உள்ள மின்மயானத்தில் உடன் தகனம் செய்யப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.