தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய சினிமாவில் பிலிம்பேர் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. சினிமா உலகில் தேசிய விருதுக்கு அடுத்தபடியாக பிலிம்பேர் விருதையே கலைஞர்கள் பெரிய கௌரவமாக நினைக்கின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் 63-வது பிலிம்பேர் விருது வழங்கும் விழா வருகிற ஜுன் 18-ந் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த விருதுக்கு தமிழில் அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் 5 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர் (அஜித்), சிறந்த இசையமைப்பாளர் (ஹாரிஸ் ஜெயராஜ்), சிறந்த பாடலாசிரியர் (தாமரை), சிறந்த துணை நடிகர் (அருண் விஜய்), சிறந்த துணை நடிகை (பார்வதி நாயர்) ஆகிய விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ‘காக்கா முட்டை’, ‘தனி ஒருவன்’, ‘ஐ’, ‘பாபநாசம்’ ஆகிய படங்களும் 3-க்கும் மேற்பட்ட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.