நடிகர் சந்தானத்தின் தந்தை நீலமேகம் (69), சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
கல்லீரல் செயல்திறன் குறைவு காரணமாக, நீலமேகம் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவர் இறந்தார். அவரது உடல் தாம்பரத்தை அடுத்துள்ள பொழிச்சலூர், பஜனை கோயில் தெருவிலுள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பொழிச்சலூர் மயானத்தில் நடைபெறவுள்ளன.
நீலமேகத்துக்கு மனைவி பொன்னுகண்ணு, மகன்கள் நடிகர் சந்தானம், நாகராஜ் உள்ளனர்.