ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை பி. வாசு இயக்க உள்ளார். இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடிக்க ரித்திகா சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் சிவராஜ்குமார், ஷக்திவேல் வாசு, வேதிகா நடித்த சிவலிங்கா என்கிற கன்னடப் படம் 100 நாள்கள் ஓடியது. கன்னடத்தில் வெற்ற பெற்ற சிவலிங்கா படம், தற்போது தமிழ் – தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. பி. வாசு இயக்கத்தில் இந்தப் படம் ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் உருவாகிறது. சசிகுமார் நடித்த வெற்றிவேல் படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பில் தயாரித்த R.ரவீந்திரன், இப்படத்தைத் தயாரிக்கிறார்.
வடிவேலுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். பொங்கலுக்குப் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.