செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு | நடிகை சமந்தாதிருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு | நடிகை சமந்தா

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு | நடிகை சமந்தாதிருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு | நடிகை சமந்தா

1 minutes read

நடிகை சமந்தா திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை சமந்தாவுக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும் திருமணம் முடிவாகி உள்ளது. இருவரும் தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்த போது காதல் மலர்ந்து இப்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர்.

இவர்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக்கொண்டு உள்ளனர். நாக சைதன்யாவின் தாயார் சமீபத்தில் சமந்தாவின் வீட்டுக்கு சென்று ஒரு நாள் முழுவதும் தங்கி இருந்ததாகவும் அப்போது சமந்தாவின் குணநலனை நேரில் பார்த்து திருப்தி அடைந்து திருமணத்துக்கு சம்மதம் சொன்னதாகவும் கூறப்படுகிறது.

நாக சைதன்யாவும் சமந்தாவும் ஐதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் வீடியோ படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. யாரோ ரகசியமாக இதனை படம்பிடித்து வெளியிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தத்தை நடத்தி இந்த வருடம் இறுதியில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

சமந்தாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்றும் திருமணத்துக்கு பிறகு கணவர் குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படுவது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறி உள்ளார். அவர் தற்போது புதிய படங்களை ஒப்புக்கொள்வதை திடீரென்று நிறுத்தி உள்ளார். இரண்டு தெலுங்கு தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய சமந்தாவை அணுகியதாகவும் அவற்றில் நடிக்க அவர் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா நடித்துள்ள ‘ஜனதா கேரேஜ்’ தெலுங்கு படம் முடிவடைந்து திரைக்கு வர தயாராகிறது. தற்போது ஏற்கனவே ஒப்பந்தமான ‘வட சென்னை’ என்ற ஒரு படம் மட்டும் கைவசம் உள்ளது. இதில் தனுஷ் ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். வேறு புதிய படங்களுக்கு அவர் கால்ஷீட் கொடுக்கவில்லை. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிட அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.