செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா என்ன நடந்தாலும் கவலைப்படாத டேக் இட் ஈஸி கேரக்டர் | ப்ரியா பவானிசங்கர்என்ன நடந்தாலும் கவலைப்படாத டேக் இட் ஈஸி கேரக்டர் | ப்ரியா பவானிசங்கர்

என்ன நடந்தாலும் கவலைப்படாத டேக் இட் ஈஸி கேரக்டர் | ப்ரியா பவானிசங்கர்என்ன நடந்தாலும் கவலைப்படாத டேக் இட் ஈஸி கேரக்டர் | ப்ரியா பவானிசங்கர்

1 minutes read

சின்னத்திரையின் ஸ்டார் தொகுப்பாளினியான டிடிக்கு அடுத்தபடியாக தற்போது அதிக ரசிகர்களை தன்வசமாக்கி வருபவர் ப்ரியா பவானிசங்கர். விஜய் டிவியின் “கல்யாணம் முதல் காதல் வரை’, “ஜோடி நம்பர் ஓன்’, “ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5′,

“கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ என கலக்கி வரும்

இவரைப் பற்றி:

பூர்வீகம்?

மயிலாடுதுறை பூர்வீகமாக இருந்தாலும் என்னுடைய குடும்பம் சென்னையிலேயே குடியேறிவிட்டதால் படித்தது, வளர்ந்தது எல்லாம் இங்கேதான். அதனால் நான் எப்போதும் சென்னைவாசிதான். அப்பா பேங்க்கில் வேலை பார்க்கிறார். அம்மா இல்லத்தரசி. ஒரு அண்ணன், அண்ணி. அளவான அழகான குடும்பம் எங்களோடது. பி.இ. முடிச்சிட்டு ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தேன். ஒரு கட்டத்தில் மெஷின் போன்ற வாழ்க்கை போரடிக்கவே செய்திவாசிப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்தேன். அதன் மூலம்தான் மீடியாவுக்குள் வந்தது. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பு, வீ.ஜே என்று இருந்தேன். திடீரென விஜய்டிவியில் “கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் வாய்ப்பு வர, சரி நடித்துதான் பார்ப்போமே என்று சும்மா விளையாட்டாகதான் இறங்கினேன். ஆனால் இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சந்தோஷமாக இருக்கிறது. இதைத் தவிர விஜய் டிவியின் “ஜோடி நம்பர் 1′ சீசன் 8 நிகழ்ச்சியையும், “கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறேன்.

செய்தி வாசிப்பாளர், நடிப்பு, தொகுப்பாளினி எது பிடித்திருக்கிறது?

சீரியலில் நடிப்பதை விட நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதுதான் அதிகம் பிடித்திருக்கிறது. நல்ல ஷோவுக்காக இதுவரை காத்திருந்தேன். தற்போது “கிங்ஸ் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சி மூலம் நல்ல வாய்ப்பு அமைஞ்சிருக்கு. செய்தி வாசிப்பை பொருத்தவரை இன்னும் கொஞ்சம் காலம் கழித்துக் கூட தொடரலாமே…

எப்பவுமே கலகலன்னு இருக்கீங்களே நிஜத்தில் எப்படி?

என்ன நடந்தாலும் கவலைப்படாத டேக் இட் ஈஸி கேரக்டர். அடுத்தவங்களை கஷ்டப்படுத்தாமல் சிம்பிளா, சந்தோஷமா வாழ்க்கையை அனுபவிக்கணும் அவ்ளோதான்.

உங்கள் பொழுது போக்கு?

ஷாப்பிங் போவது. நிறைய ஷாப்பிங் பண்ணுவேன். டிரஸ் எடுப்பது அவ்வளவு பிடிக்கும்.

சினிமா ஹீரோயின் வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?

அது அந்த கேரக்டரையும், டீமையும் பொருத்ததுதான். நல்ல வாய்ப்பு என்றால் நிச்சயம் நடிப்பேன். அதற்காக சினிமா ஹீரோயின் ஆகியே தீர வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.