செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ரஜினி எல்லோரையும் ஆச்சரியப்படவைக்கும் அபூர்வ மனிதர் | ராதிகா ஆப்தே ரஜினி எல்லோரையும் ஆச்சரியப்படவைக்கும் அபூர்வ மனிதர் | ராதிகா ஆப்தே

ரஜினி எல்லோரையும் ஆச்சரியப்படவைக்கும் அபூர்வ மனிதர் | ராதிகா ஆப்தே ரஜினி எல்லோரையும் ஆச்சரியப்படவைக்கும் அபூர்வ மனிதர் | ராதிகா ஆப்தே

2 minutes read

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க உங்களுக்கு பயமாக இருந்ததா?

‘‘பயம் இல்லாமல் இருக்குமா! முதல்கட்ட படப்பிடிப்பு மலேஷியாவில் நடந்தது. கோவாவில் எங்கள் இருவருக்குமான ஜோடி காட்சிகளை படமாக்கினார்கள். முதல் நாள் படப்பிடிப்பு என்னால் மறக்க முடியாதது. அவரது காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் வாங்கினேன். படப்பிடிப்பு தொடங்கியதும் என் இதயத் துடிப்பு அதிகமாகிவிட்டது. கைகளும், கால்களும் நடுங்கத் தொடங்கின. அதனால் நிறைய ‘ரீடேக்’ வாங்கவேண்டியதிருந்தது.

எனது பதற்றத்தை உணர்ந்த ரஜினி சார் என் அருகில் வந்தார். ‘நான் உங்களுடைய நிறைய படங்களை பார்த்     திருக்கிறேன். உண்மையில் உங்களோடு நடிப்பதை நினைத்து நான்தான் பயப்பட்டேன்.  ஸ்டைல் காட்டுவது, பஞ்ச் டயலாக் பேசுவது போன்றவை எனக்கு எளிது. ஆனால் சென்டிமெண்டாக நடிப்பதில் நான் கொஞ்சம் வீக். அதிலும் உங்களை போன்ற சிறந்த நடிகையோடு நடிக்கும் போது நான்..!’ என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான் வாய்திறந்து, ஆச்சரியத்தில் உட்கார்ந்துவிட்டேன்.

எனது பதற்றத்தை போக்கத்தான் அவர் அவ்வாறு சொன்னார் என்பது எனக்கு தெரியும். அதற்காக இவ்வளவு இறங்கி வந்து பேசிய, சிறந்த மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. நாம் எளிமைக்கு இலக்   கணமாக எத்தனையோ பேரை பார்த்திருக்கிறோம். எளிமையின் எளிமை அவர்.

அவரிடம் இருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும். சரியான நேரத்திற்கு ஷூட்டிங்குக்கு வந்துவிடுவார். டைரக்டர் முதல் லைட்பாய் வரை எல்லோரிடமும் மரியாதையாக பழகுவார். சாதாரண மனிதர் போன்று நடந்துகொள்வார். எதிலும் பிடிவாதம் கிடையாது. எனக்கு மிக ஆச்சரியமான அனுபவங்களை கபாலி தந்திருக்கிறது. அதற்கெல்லாம் கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்’’

ஏழு மொழிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட சினிமாக்களில் நடித்திருந்தாலும், ராதிகா ஆப்தே இப்போது புகழின் உச்சத்திற்கு வந்திருப்பதற்கு காரணம், ரஜினியின் கபாலி! சூப்பர் ஸ்டாரின் கதாநாயகி குமுதவல்லியாக அதில் ராதிகா ஆப்தே நடித்து, பலரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார்.

‘‘திடீரென்று எனது போனில் ஒரு அழைப்பு வந்தது. ‘நான் தமிழ் பட டைரக்டர் ரஞ்சித்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த குரல், எனது புதிய படங்கள் பற்றியும், அதில் நான் செய்துகொண்டிருக்கும் கதாபாத்திரங்கள் பற்றியும் கேட்டது. யாரோ என்னை போனில் ஏமாற்றுவதாக நான் நினைத்துக் கொண்டேன். பின்பு அவர், எனக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில் ‘ரஜினியின் படத்தில் கதா நாயகியாக நடிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். நான் உடனே இது போலி அழைப்புதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

அதன் பின்புதான் உண்மை தெரிந்தது. அவர் என்னை சந்திக்க வரும்படி அழைத்தார். நாங்கள் பார்த்தோம். பேசினோம். கதை கேட்டேன். எனது கதாபாத்திரத்தை பற்றி நிறைய பேசினோம். கடைசியில் நான் 100 சதவீதம் சம்மதிக்கிறேன் என்றேன்.

அப்போது எனக்கு ஒரு கனவு உலகத்தில் மிதப்பதுபோல் இருந்தது. ‘நான் ரஜினியின் கதாநாயகியாகப் போகிறேன்’ என்று உலகம் முழுக்க கேட்கும் விதத்தில் கத்தவேண்டும்போல் தோன்றியது. அதுவே என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான தருணம் என்றுகூட கூறலாம். ரஜினி எல்லோரையும் ஆச்சரியப்படவைக்கும் அபூர்வ மனிதர். யாராலும் அவரைப்போல் ஆக முடியாது. படப்பிடிப்பின் ஒரு நிமிடத்தைக்கூட என்னால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு நான் அனுபவித்து நடித்தேன்’’

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.