நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள “கபாலி’ படத்தின் டிக்கெட் முன் பதிவு திங்கள்கிழமை (ஜூலை 18) உலகம் முழுவதும் தொடங்குகிறது.
டிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே “ஆன்லைனில்’ ரசிகர்களின் முன் பதிவு தொடங்கி விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
“கபாலி’ திரைப்படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்று ஏராளமானோர் ஆர்வத்துடன் உள்ளதால், முன்பதிவு செய்வதில் ரஜினி ரசிகர்களிடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 மொழிகளில்…: கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலியை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியாகிறது. தமிழ் தவிர மலாய் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.