செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவுஅமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு

அமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவுஅமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு

1 minutes read

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். இருவரும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்தார்கள்.

அமலாபால், கேரளாவை சேர்ந்தவர். கடந்த 2010-ம் ஆண்டில், ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, ‘சிந்து சமவெளி,’ ‘மைனா,’ ‘தெய்வ திருமகள், ‘தலைவா,’ ‘வேலையில்லா பட்டதாரி,’ ‘அம்மா கணக்கு’ உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக ‘வட சென்னை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும், ‘கிரீடம்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமாகி, ‘மதராச பட்டினம்,’ ‘தலைவா,’ ‘தாண்டவம்,’ ‘சைவம்,’ ‘இது என்ன மாயம்’ உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ள விஜய்க்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. விஜய் டைரக்டு செய்த ‘தலைவா,’ ‘தெய்வ திருமகள்’ ஆகிய படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூன் 12-ந் தேதி, சென்னையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை டைரக்டர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய்-அமலாபால் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியது. இரண்டு பேரும் பிரிவது என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி, அமலாபால், டைரக்டர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள். டைரக்டர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசிக்கிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார். இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த விவகாரம், தமிழ்-மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.