ரஜினியின் ‘கபாலி’ கடந்த 22 ந்தேதி ரிலீஸ் ஆனது. இதை அவரது ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர்.
முதல் நாளில் ரஜினி படத் தை பார்த்தால் அது பெரிய சாதனை என்பதாகவே பலர் கருதினார்கள். அந்த அளவு ‘கபாலி’ டிக்கெட் வாங்க ஆயிரக்கணக்கானோர் அலை மோதினார்கள். ‘டிக்கெட்’ என்ன விலை என்றாலும் படம் பார்த்தே தீர்வது என்பதில் பெரும் பாலானோர் உறுதியாக இருந்தனர்.
இந்தியா மட்டுமல்ல உலகம்முழு வதும் ரஜினியின் கபாலிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 50 நாடுகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் களை கட்டியது. தமிழ்நாட்டில் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தார்கள். ரசிகர்களிடம் மட்டுமல்ல. படம் பார்க்கவிரும்பிய அனைவருமே உற்சாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கபாலி படம் உலகம் முழுவதும் 6 ஆயிரத்து 500 க்கும்அதிகமான தியேட்டர் களில் திரையிடப் பட்டுள்ளது. இதில் 3 ஆயிரத்து 500 தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சியாக நடந்தது. 2 ஆயிரம் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் ‘கபாலி’ படத்துக்கு ரசிகர் களின் ஆதரவு அமோகமாக இருந்தது. தமிழ்நாட்டில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெரும்பாலானவை ‘ஹவுஸ்புல்’ காட்சிகளாக நடந்தன. சராசரியாக 90 சதவீத டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. அண்டை மாநிலங்களிலும் இது போன்ற நிலை இருந்தது. இந்தியாவில் வெளியான ‘கபாலி’ க்கு முதல் நாளில் 50 சதவீதம் முதல் 60 சத வரவேற்பு இருந்தது.
கபாலி உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.40 கோடி வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ இந்தி படத்திற்கு முதல் நாள் வசூல் ஆன ரு.36 கோடி சாதனை என்று கூறப்பட்டது. இது அதையும் மிஞ்சி இருக்கிறதுஇது இந்தி படங்களுக்கு கூட இல்லாத மிகப் பெரிய வசூல் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.