கனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.
அமெரிக்காவில் செக்ஸ் நடிகையாக வாழ்க்கையைத் தொடங்கியவர், இப்போது பாலிவுட்டில் நம்பர் ஒன் ஹீரோயின். இந்திய அளவில் மோடிக்குப் பிறகு கூகுள் தேடுதலில் அதிகமாக தேடபடும் நபராக சன்னி லியோன் உள்ளார்.‘
முன்னாள் ஆபாசப்பட நடிகையான சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது.தன்னுடைய கதாபாத்திரத்தில் சன்னி லியோனே நடிக்க உள்ளார்.
தனிநபர்களின் வாழ்க்கை வரலாறுகளை திரைப்படமாக உருவாக்குவது பாலிவுட்டில் தற்போது டிரெண்டாக உள்ளது. சச்சின் தெண்டுல்கர்,அசாருதீன், டோனி உள்பட பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில்,சன்னி லியோனும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
அமெரிக்காவில் பிரபல ஆபாச பட நடிகையாக கொடி கட்டி பறந்து,அந்த திரையுலகை விட்டு வெளியேறி,தற்போது பாலிவுட்டில் பிரபலமாகியது வரையிலான சன்னி லியோனின் வாழ்க்கை அப்படியே படமாக்கப்பட உள்ளது.இந்த திரைப்படத்தை பாலிவுட் இயக்குநர் அபிஷேக் வர்மா இயக்க உள்ளார்.இவர் இதற்கு முன்னர் ‘தேரே பின் லேடன்’ படத்தை இயக்கி பிரபலமானவர்.
இந்த திரைப்படத்தில் சன்னி லியோனின் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க உள்ளார்.சன்னி லியோனின் கணவரான டேனியல் வெபர்,படத்திலும் கணவராகவே நடிக்க உள்ளார்.இந்த படத்தை சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்க உள்ளனர்.இந்த திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.