செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா | “பொட்டு”அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா | “பொட்டு”

அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா | “பொட்டு”அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா | “பொட்டு”

1 minutes read

தம்பி வெட்டோத்தி சுந்தரம், சவுகார்பேட்டை  படங்களின் இயக்குனர் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில்,  ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், உருவாகும்  படம் பொட்டு.

இந்தப் படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

இனியா ஆதிவாசி பெண்ணாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய பாத்திரத்தில் அபூர்வசக்தி கொண்ட மந்திரவாதியாக நமீதா
நடிக்கிறார்

கொல்லி மலையைச் சேர்ந்த ஒரு ஆதிவாசி பெண்ணுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. அவர் கொலை செய்யப்பட்டு விடுகிறார். அது தற்கொலை என சொல்லப்பட்டு அந்த ஸீட் கோடி கணக்கில் விலை பேசப்படுகிறது.

’இறந்த ஆதிவாசிப் பெண் ஆவியாக வந்து எப்படி பழி தீர்க்கிறாள்?’-என்பதுதான் மீதி கதையாம்.

பொட்டு என்ன மாதிரியான படம் என்று இயக்குனர் வடிவுடையான் கூறியதாவது:-

இது பரபரப்பான பேய் படமாக இருக்கும். மருத்துவக் கல்லூரி பின்னணியில் கதை அமைந்துள்ளது. சமீபத்தில் கொல்லிமலையில் படப்பிடிப்பை நடத்தினோம். ஆதிவாசிகள், பழங்குடிகள் பகுதியில் நடக்கும் காட்சி ஒன்றை படமாக்கினோம். இதற்காக கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் உயர மலைப் பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டது.  இந்தக் காட்சியில் நமீதா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்.

நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது. வண்டி எதுவும் போகாது. 4 கிலோ மீட்டர்  எல்லோரும், எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்துச் சென்று படமாக்கினோம் என்று கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.