செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்மீண்டும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்

மீண்டும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்மீண்டும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்

1 minutes read

ரஜினியின் ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கிய இந்த படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து  இருக்கிறார். பா.ரஞ்சித் அடுத்து வேறு சில முன்னணி ஹீரோக்களின் படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. ஆனால் அவர் தரப்பில் ‘ரஞ்சித் கதை எழுதுகிறார். எந்த ஹீரோவுக்கும் கதை சொல்லவில்லை’ என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

‘கபாலி’ படத்தை தயாரித்த தாணு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் படம் எடுக்க விரும்புவதாகவும், ரஜினி சரி என்றால் மீண்டும் படம் எடுக்க தயார் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்கும் புதிய படம் தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறத

தனுஷின் ஒண்டர்பார் பட தயாரிப்பு நிறுவனம் ரஜினியின் புதிய படத்தை தயாரிக்கிறது. ‘கபாலி’ இயக்குனர் பா.ரஞ்சித் இந்த படத்தை இயக்குகிறார். இந்த தகவலை தனுஷ், பா.ரஞ்சித் ஆகியோர் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக் கிறார்கள். தற்போது ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார். இந்த பட வேலைகள் முடிந்ததும் ரஜினியின் புதிய படப்பிடிப்பு தொடங்குகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.