செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகர் தனுசுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்க போவதாக தகவல்கள்நடிகர் தனுசுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்க போவதாக தகவல்கள்

நடிகர் தனுசுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்க போவதாக தகவல்கள்நடிகர் தனுசுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிக்க போவதாக தகவல்கள்

1 minutes read

துரை செந்தில்குமார்  இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்து உள்ள கொடி படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தற்போது தனுஷ்  இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தொட்ட என்ற பட்த்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிந்ததும் அடுத்து பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில்  தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தலைப்பிடப்படாத  இந்த படத்தில் ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் அல் பசினோவும் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின்  படப்பிடிப்பு பெரும்பகுதி நியூயார்க்கில் நடைபெற உள்ளது.இந்த் படத்தில் அல் பசினோ முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். முதலில் இந்த் வேடத்தில் நடிக்க  ஹாலி வுட் நடிகர் மோர்கன் பிரிமேனை நடிக்க வைப்பதாக் இருந்தது.  தற்போது அல் பசினோவுடன் தயாரிப்பாளர் தரப்பில் பேசபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த வதந்தி உண்மையானால், பிராந்திய சினிமாவுக்கு ஒரு பெரிய வளர்ச்சி இருக்கும். ஹாலிவுட் நடிகர்களை அணுகுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துடன்  எந்திரன் 2 வில்  நடிக்க வைக்க அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரரை அணுகினர். பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அது கைவிடபட்டு தற்போது அந்த வேடத்தில்பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.