செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கொழும்பில் நடிகை பூஜாவுக்கு ரகசிய திருமணம்கொழும்பில் நடிகை பூஜாவுக்கு ரகசிய திருமணம்

கொழும்பில் நடிகை பூஜாவுக்கு ரகசிய திருமணம்கொழும்பில் நடிகை பூஜாவுக்கு ரகசிய திருமணம்

1 minutes read

‘நான் கடவுள்’, ‘அட்டகாசம்’ நடிகை பூஜாவுக்கு கொழும்பில் ரகசிய திருமணம் நடந்தது.

பிரபல நடிகை பூஜா. இவர் 2003–ம் ஆண்டு ‘ஜே ஜே’ படம் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார். ‘அட்டகாசம்’, ‘தம்பி’, ‘உள்ளம் கேட்குமே’, ‘ஜித்தன்’, ‘பட்டியல்’, ‘தகப்பன்சாமி’, ‘பொறி’ ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பாலா இயக்கத்தில் ஆர்யாவுடன் நடித்த ‘நான் கடவுள்’ படம் பூஜாவுக்கு முக்கிய படமாக அமைந்தது. இதில் அவர் பார்வையிழந்த பெண்ணாக நடித்து இருந்தார். பூஜாவின் தந்தை கர்நாடகாவை சேர்ந்தவர். தாய் இலங்கையை சேர்ந்தவர். இதனால் இலங்கை தலைநகர் கொழும்பில் அவர் வசித்து வந்தார். சில சிங்கள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பூஜாவுக்கும், இலங்கையில் தொழில் அதிபராக இருக்கும் தீபக் சண்முகநாதன் என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் பூஜாவுக்கு கொழும்பில் நேற்று ரகசிய திருமணம் நடந்தது. இலங்கையை சேர்ந்த பிரஜன் டேவிட் வேதகன் என்பவரை, நடிகை பூஜா திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.