Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா நீதிமன்றத்தில் மனு சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா நீதிமன்றத்தில் மனு

சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா நீதிமன்றத்தில் மனு சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா நீதிமன்றத்தில் மனு

1 minutes read

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வேத் என்ற மகனும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

அவர்கள் பிரிவுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், தனது கணவர் அஸ்வினை சட்டரீதியாக விவாகரத்து செய்து வைக்குமாறு சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்று சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி -2’ படத்தை இயக்கவிருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சமுத்திரகனி, சரண்யா பொன்வண்ணன், விவேக் என முந்தைய பாகத்தில் நடித்த நடிகர்களும் இப்பாகத்திலும் நடிக்கிறார்கள்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More