செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் கருத்துமுதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் கருத்து

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் கருத்துமுதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் கருத்து

2 minutes read

ஜல்லிக்கட்டுக்கு உரிமை கோரி தமிழ்நாடு முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் பொங்கி எழுந்து போராடியது வரலாற்றுப் பதிவாக மாறியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளை பணிய வைத்தனர்.

அந்த பரபரப்பு ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியிருந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நேற்றிரவு கூறிய குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலை மீண்டும் உலுக்கும் வகையில் மாறியுள்ளது. அவரது குற்றச்சாட்டுக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பரவி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்களை பெரும்பாலானவர்கள் ஆதரித்து தகவல்களை பரவவிட்டுள்ளனர். இதன் காரணமாக சமூக ஊடகங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவு குறித்து நடிகர்-நடிகைகள் சிலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடுக்கடுக்காக பல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார். அவை வருமாறு:-

“நிம்மதியாய் உறங்கு தமிழகமே… அவர்கள் நமக்கு முன்னால் விழித்து விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 7-ந் தேதி எனக்கு பிரச்சினைகள் (விஸ்வரூபம் பட சர்ச்சை) ஏற்பட்டன. மக்களின் அன்பு மட்டும் இருந்தால், எந்த சூழ்ச்சியில் இருந்தும் மீண்டு வெற்றி பெறலாம்.

பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்து சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவதை விடுத்து நாம் குற்றமற்ற கடமை செய்வோம் முடியுமா?.

தமிழ்நாட்டை தனிநாடாக பிரிக்க வேண்டாம். தமிழ்நாட்டுக்காக இந்தியா அகிம்சை வழியில் போராடும். யாரும் இறக்க மாட்டார்கள். ஆனால் அறியாதவர்கள் உயிரோடு மீள்வார்கள்.

சத்யராஜ்… பெரியார் பெரியார்னு வாய் கிழிய பேசும் நாம் இந்த நேரத்துல ஒரு டப்மாஷாவது போட வேண்டாமா? நாம் முதலில் மனிதர்கள். பிறகுதான் நடிகர்கள்.

மாதவன்… நீங்களும் தமிழக பிரச்சினை குறித்து பேசுங்கள். மோசமான அரசியலுக்கு எதிராக குரல் கொடுக்கும் நேரம். அதிருப்தியை சத்தமாக சொல்லுங்கள்”.

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யா, டுவிட்டர் பக்கத்தில், “ஓ.பன்னீர்செல்வம் சரியான நேரத்தில் சிறப்பாக துணிச்சலாக பேசி இருக்கிறார். பாராட்டுகள்”என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் கூறும்போது, “மெரினாவில் ஓ.பி.எஸ். தமிழக அரசியல் உண்மையாகவே கேம் ஆப் த்ரோன்ஸ் மற்றும் ஹவுஸ் ஆப் கார்ட்ஸ் சீரியல்களைப்போலவே இருக்கிறது”என்று கூறியுள்ளார்.

நடிகர் எஸ்.வி.சேகர், “அ.தி.மு.கவில் ஓர் ஆண் மகன். ஒரு பொருளாளர் நீக்கத்தில் பிறந்ததுதான் அ.தி.மு.க. எனும் கட்சி. வரலாறு திரும்புகிறது”என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இமான், “தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட்டு இருக்கிறது. இதுதான் சிறந்த வழி. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து சரியான பேச்சு. நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது”என்று கூறியுள்ளார்.

நடிகர் அருள்நிதி, “தமிழக மக்களுக்கு உண்மையை தெரிவித்து நேர்மையாக நடந்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். தைரியமான பேச்சு”என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு, “ஒரு நாயகன் உதயமாகிறான்”என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டு உள்ளார்.

நடிகை கவுதமி, “இதற்காகத்தான் அம்மா, ஓ.பன்னீர்செல்வத்தை தேர்ந்தெடுத்தார். தன் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர். தன்மீது அம்மா வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறார்”என்று கூறியிருக்கிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் கூறும்போது, “ஓ.பன்னீர்செல்வம் இன்று ஒரிஜினல் பன்னீர்செல்வம் ஆகி இருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கிண்டல்களை எதிர்கொண்டவர் அவர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் பதிவான சி.சி.டி.வி கேமரா காட்சிகளை 3 நாட்களுக்குள் வெளியிட வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்களை உடைக்கும் போராட்டத்தை நடத்துவேன்”என்று கூறியுள்ளார்.

திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த இசையமைப்பாளர்-டைரக்டர் கங்கை அமரன் அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துகளை அபகரிக்க உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா? ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டு வரவேண்டும். பன்னீர்செல்வம் உண்மையான ஆம்பளை.

சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில், எதற்காக முதல்வராக வரவேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார்? எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்குத்தான் உள்ளது”.

இவ்வாறு கங்கை அமரன் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.