செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா சந்திர ஹாசன் மாரடைப்பால் மரணம்சந்திர ஹாசன் மாரடைப்பால் மரணம்

சந்திர ஹாசன் மாரடைப்பால் மரணம்சந்திர ஹாசன் மாரடைப்பால் மரணம்

1 minutes read

நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் நேற்று லண்டனில் மாரடைப்பால் காலமானார்.  பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி.சீனிவாசனின் மகனாக பிறந்த சந்திர ஹாசன் வழக்கறிஞர் பட்டம்  பெற்றவர்.

கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த, ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த  சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

அவரது பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தென்னிந்திய நடிகர்  சங்கம் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான செய்தி  ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

“நண்பனாய் நல்லாசானாய், தமயனும் தகப்பனுமாய் அவரை பெற்றதால் உற்றது நல் வாழ்வு. எனக்காக அவர் கண்ட  கனவுகளில் பாதியைக் கூட நான்  நிறைவேற்றவில்லை.”

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.