தயாரிப்பாளர்கள் நடிகராகலாம், இயக்குனர்கள் நடிகராகலாம் என்று தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது இசையமைப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகிறார்கள்.
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவும் மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் இருவரும் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த பிறகுதான் நாயகனாக அறிமுகமானார்கள்.
ஆனால், ஹிப்ஹாப் தமிழா பத்துப் படங்களுக்கு இசையமைப்பதற்கு முன்பே நாயகனாக மாறிவிட்டார். தனிப்பட்ட இசை ஆல்பங்களை உருவாக்கி அதன் மூலம் கவனிக்கப்பட்டு திரையுலகத்திற்குள் நுழைந்தவர் ஹிப்ஹாப் தமிழா. மீசைய முறுக்கு படத்தில் நாயகனாக அறிமுகமாவது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.
இயக்கம், இசை, நடிப்பு என முக்கிய மூன்று துறைகளுடன் ஒரு படத்தில் பணியாற்றுவது சாதாரண விஷயமல்ல. அதோடு, இந்தப் படத்தில் பல புதுமுகங்களுக்கு வாய்ப்புகளை அளித்துள்ளார்.