பாலிவுட் கவர்ச்சி புயல் சன்னிலியோன் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். சமீபத்தில் சன்னிலியோனுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை வந்துள்ளது. ஆனால் சினிமாவில் பிசியாக நடித்து வருவதால் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர்த்து வந்தார். திடீரென் ஒருநாள் கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஒரு பெண் குழந்தையுடன் அவரும், அவரின் கணவர் டேனியலும் இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரை சேர்ந்த 21 மாத குழந்தையான நிஷா கவுர் வெபர் என்கிற குழந்தையை தத்தெடுத்துள்ளனர். நிஷா குறித்து சன்னிலியோன் கூறுகையில் அவள் மிகவும் அழகு. அவள் சிரிக்கும் போது உங்கள் இதயம் உருகும். அவளை சுதந்திரமாக வளர நாங்கள் அனுமதிப்போம்’ என அவர் கூறியிருக்கிறார்.