நடிகர் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்த கவுதமி, சமீபத்தில் அவரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கியுள்ளார். மேலும், கமலைப் பிரிந்தது ஏன் என்று விளக்கமும் அளித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் கமலோடு கவுதமி இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாக சில சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அதில் நடிகை கௌதமி மீண்டும் நடிகர் கமலுடன் நெருக்கம் காட்டுவதாகவும், இவர்கள் இருவரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசுவதாகவும் கூறியுள்ளனர். மீண்டும் கமலும், கௌதமியும் இணைய இருக்கிறார்கள் என்ற வதந்தியை அந்த வீடியோவில் கிளப்பி விட்டுள்ளனர். அந்த செய்தியை பார்த்த கவுதவி, தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.